உலகம்

ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்: உலக சுகாதார நிறுவனம்!

10th Sep 2019 04:54 PM

ADVERTISEMENT


லண்டன்: ஒட்டுமொத்தமாக உலகளவில் பார்த்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்கொலையைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

2010 - 2016ம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் சர்வதேச அளவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 9.8% ஆக குறைந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு தற்கொலையும், குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் பேரிடியாக விழுகிறது. ஆனாலும் தற்கொலையை இதுவரை தடுக்க முடியவில்லை. எனவே, தற்கொலையைத் தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது மலேரியா, மார்பகப் புற்றுநோய் மற்றும் இன அழிப்பு அல்லது போரின் போது உயிரிழக்கும் நபர்களை விட அதிகம் என்றும், தற்கொலை என்பது உலக சுகாதாரத்தின் மிகப்பெரிய சிக்கல் என்றும் வெறும் 38 நாடுகள் மட்டுமே தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT