உலகம்

ஜாக் மா அலிபாபா குழுமத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகல்

10th Sep 2019 02:23 PM

ADVERTISEMENT

 

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், அலிபாபா குழுமம் உருவாக்கப்பட்ட 20-ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். இன்று 55-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜாக் மா, இக்குழுமத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இன்று முதல், 2020-ஆம் ஆண்டு அலிபாபாவின் பங்குத்தாரர் மாநாடு நடைபெறும் வரை, இக்குழுமத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார்.

ஜாக் மாவின் பதவி விலகல், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவு அல்ல. அவர் அலிபாபாவின் பணியாளர்களில் ஒருவராக தொடர்ந்து இருப்பார் என்று அலிபாபா குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜாக் மாவைப் பொருத்தவரை, 55 வயது இளம் வயதாகும். அலிபாபா குழமம் அவரது கனவுகளில் ஒன்று. பல துறைகளில் ஈடுபட ஆர்வம் காட்டிய அவர், 75 வயதிலும் உற்சாகம் கொண்டிருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
 

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

ADVERTISEMENT
ADVERTISEMENT