உலகம்

2050-க்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிக்க முடியும்

10th Sep 2019 12:57 AM

ADVERTISEMENT


வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் மலேரியா நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டனிலிருந்து வெளியாகும் தி லான்செட் அறிவியல் இதழில் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மலேரியாவை முற்றிலும் ஒழிப்பது என்பது நீண்ட காலமாகவே கைக்கெட்டாத கனவாக இருந்து வந்தது. ஆனால், மருத்துவம், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், அந்த நோக்கத்தை அடைவது சாத்தியம் என்பது தெரிய வந்துள்ளது.
மலேரியா நோயை குணப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகள் பரவலான இடங்களில் அளிக்கப்பட்டு வருவது, சமூகபொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களால், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிப்பதற்கு வாய்ப்புள்ளது.
மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்ததைவிட தற்போது 36 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் 60 சதவீதம் குறைந்துவிட்டன. இந்தப் போக்கு நீடித்தால், மலேரியாவை முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்று அந்தக் கட்டுரையில் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT