உலகம்

சிரியா: வான்வழித் தாக்குதலில் 18 ஈரான் ஆதரவுப் படையினர் பலி

10th Sep 2019 12:59 AM

ADVERTISEMENT


சிரியாவில் ஈரான் ஆதரவுப் படையினரின் நிலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
சிரியாவில் ஈராக் எல்லையையொட்டி அமைந்துள்ள  டெயிர் எஸார் மகாணம், அல்பு கமால் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் ஆதரவு பெற்ற படையினரின் நிலை மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், அங்கிருந்த 18 படையினர் உயிரிழந்தனர். எனினும், அவர்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியவில்லை.
மேலும், அந்த விமானத் தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரமும் தெரியவில்லை என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கடைசிப் புகலிடமாக இருந்த டெயிர் எஸார் மாகாணத்தை அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினரும், ரஷியா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற படையினரும் அண்மையில் மீட்டனர்.
இந்த நிலையில், ஈரான் ஆதரவுப் படையினருக்கு எதிரான இந்தத் தாக்குதலை, இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT