உலகம்

அரசு மரியாதையுடன் வரவேற்பு: நரேந்திர மோடி, விளாதிமீர் புதின் சந்திப்பு

4th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

 

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பின் பேரில் மோடி அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.  ரஷியாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை.  

இந்நிலையில், செப்டம்பர் 4-ஆம் தேதி காலை ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டுமானத்தளத்தை பார்வையிட்டனர். 

Tags : Prime Minister Narendra Modi Russian President Vladimir Putin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT