உலகம்

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார் (புகைப்படங்கள்)

4th Sep 2019 01:13 PM

ADVERTISEMENT


விளாடிவோஸ்டோக்: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் இணைந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் ரஷ்யாவின் ஃபார் ஈஸ்ட் ரீஜியன் பகுதிக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெறுகிறார்.

ADVERTISEMENT

இந்த கப்பல் கட்டும் தளத்தில், பல டன் எடைகொண்ட சரக்குகளைத் தாங்கும் அளவிலான கப்பல்களும், ஐஸ் கிளாஸ் கப்பல்களும், கப்பல்களுக்கான உபகரணங்களும் தயாரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

Tags : shipyard Prime Minister Zvezda Vladimir Putin Russian President
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT