உலகம்

கொந்தளிப்பை எதிர்கொண்டு சீராக முன்னேறும் சீனத் தொழில் நிறுவனங்கள்

4th Sep 2019 06:22 PM

ADVERTISEMENT


2019-ஆம் ஆண்டிற்கான 500 முன்னணி சீனத் தொழில் நிறுவனங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இவ்வாண்டின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி அளவை தொடர்ந்து வேகமாக அதிகரித்து, தொழில் சங்கிலியின் நடுத்தர மற்றும் உயர்நிலைக்கு முன்னேறி வருகின்றன. அவற்றின் சர்வதேச செல்வாக்கும் உயர்ந்து வருகிறது.

தற்போது வர்த்தகப் பாதுகாப்பு வாதம் மற்றும் ஒருதரப்பு வாதம் தலை தூக்கி வரும் நிலையில், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துக்கு எதிரான ஓட்டம் நிறைந்ததாக உள்ளது. பாதகமான நிலைமையில் சீனத் தொழில் நிறுவனங்கள் முன்னேறி வருவதற்கான முதலாவது காரணம், சீர்திருத்தத்தை ஆழமாக்கி திறப்பு அளவை விரிவாக்குவதில் சீனாவின் உறுதியான நடவடிக்கை மற்றும் கொள்கை ரீதியான ஆதரவு என்பதாகும். 

அதோடு, மேலும் பெரும் அளவிலான வரி மற்றும் கட்டணக் குறைப்பு, முன்பை விட மேலும் சீரான நாணயக் கொள்கையின் நடைமுறையாக்கம், தொழில் புரிவதற்கான சூழலின் தொடர்ச்சியான மேம்பாடு, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கம் உள்ளிட்ட பல கொள்கைகளும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நம்பிக்கை மற்றும் இயக்காற்றலை வழங்கியுள்ளன.

தொழில் நிறுவனமானது, ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கான அடையாள அட்டை போல் உள்ளது. சீனத் தொழில் நிறுவனங்களின் விறுவிறுப்பான வளர்ச்சி, சீனப் பொருளாதாரத்தின் நிலைப்புத் தன்மையையும், நெகிழ்வுத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. 

ADVERTISEMENT

மேலும், 2-வது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள தற்போது வரை பதிவு செய்த அமெரிக்க தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட அதிகம். வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நடைமுறை செயல்களின் மூலம் சீனப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT