உலகம்

வரும் 23-ஆம் தேதி சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழா

4th Sep 2019 06:42 PM

ADVERTISEMENT


2019-ஆம் ஆண்டுக்கான சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழாக் கொண்டாட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, விழாக் கொண்டாட்டம், பண்பாட்டு வளர்ச்சி, கிராமங்களின் புத்துயிர் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையை வெளிக்காட்டும் வகையில், சீனாவின் பல பகுதிகளில் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து, சீன வேளாண் மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகத்தின் சந்தை மற்றும் பொருளாதாரத் தகவல் பிரிவின் தலைவர் டாங்கே பேசுகையில், 

"தற்போது, இணையச் சேவை குறிப்பாக நகரும் இணையச் சேவை எங்கும் காணப்படுகிறது. இணையச் சேவை, பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு போன்ற தகவல் தொழில்நுட்பங்களால், வேளாண் உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றில், முன்பு இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு விழாக் கொண்டாட்டங்களில், 5ஜி, ஆளில்லா பறக்கும் கருவி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக, சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழாவைக் கடைப்பிடிக்க, சீனா 2018-ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி, ஆண்டுதோறும் சீன நாட்காட்டியின் “ச்சியுஃபென்”என்ற தினத்தில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT