உலகம்

ரோஹிங்கயா அகதிகளுக்கு மொபைல் சேவை நிறுத்தம்: வங்கதேச அரசு உத்தரவு

4th Sep 2019 01:00 AM

ADVERTISEMENT


வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கயா முகாம்களில் செல்லிடப் பேசி இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜாகிர் ஹுசைன் கான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொபைல் இணைப்புகளைத் துண்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
மியான்மரில் போலீஸார் மீது ரோஹிங்கயா விடுதலைப் படையினர் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர்.
அதையடுத்து ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் ஏராளமான ரோஹிங்கயா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்முறைக்குள்ளானதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதையடுத்து, ராணுவம் மற்றும் உள்ளூர் இனவாத அமைப்புகளின் வன்முறைக்கு அஞ்சி, 7.4 லட்சம் ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT