உலகம்

ராஜிநாமா செய்யப்போவதில்லை: ஹாங்காங் நிர்வாகத் தலைவர் உறுதி

4th Sep 2019 01:00 AM

ADVERTISEMENT


தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக நான் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தியாக தகவல்கள் வெளியாகின. 
ஆனால், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும். அது பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களைக் காணும்போதெல்லாம, ஹாங்காங்கின் நன்மைக்காக பதவியில் தொடர வேண்டும் என்ற உறுதிப்பாடு மேலும் மேலும் அதிகரித்தே வருகிறது என்றார் அவர்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 3 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கேரி லாம் பதவி விலக வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்தச் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT