உலகம்

புக்கர் பரிசு பரிந்துரை பட்டியலில் சல்மான் ருஷ்டியின் நாவல்

4th Sep 2019 02:32 AM

ADVERTISEMENT


2019-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதி பரிந்துரைப் பட்டியலில் பிரிட்டன்-இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் குயிஷாட் நாவல் இடம் பெற்றுள்ளது.
72 வயதாகும் சல்மான் ருஷ்டி இதற்கு முன்பு மிட்நைட்ஸ் சில்ரன் என்ற தனது முதல் நாவலுக்காக 1981-ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்ட சல்மான் ருஷ்டி, மும்பையில் பிறந்தவர். இப்போது பிரிட்டனில் வசித்து வருகிறார்.
சல்மான் ருஷ்டியின் நாவல் தவிர, மார்கரெட் அட்வுட், லூசி எல்மன், எலிஃப் ஷபஃக் உள்ளிட்ட 6 பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பெயின் எழுத்தாளர் செர்வான்டிஸின் டான் குயிக்ஸாட் நாவலைத் தழுவி தனது குயிஷாட் நாவலை சல்மான் ருஷ்டி படைத்துள்ளார்.
இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாவலாசிரியர்களுக்குத் தலா 2,500 பவுண்டு பரிசு உண்டு. புக்கர் பரிசு வெல்லும் நாவலுக்கு 50,000 பவுண்டு பரிசளிக்கப்படுகிறது. லண்டனில் அக்டோபர் 14-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு வென்ற நாவல் எது என்பது அறிவிக்கப்படும். ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT