உலகம்

சீனா: 8 சிறுவர்கள் குத்திக் கொலை

4th Sep 2019 12:59 AM

ADVERTISEMENT


சீன தொடக்கநிலைப் பள்ளியொன்றில் முன்னாள் கைதி நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 8 சிறுவர்கள் பலியாகினர்.
இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
ஹுபெய் மாகாணம், பாயியாங்பிங் நகரிலுள்ள தொடக்கநிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை வந்த 40 வயது நபர், அங்கிருந்த சிறுவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த கொடூரத் தாக்குதலில் 8 சிறுவர்கள் உயிரிழந்தனர்; மேலும் 2 சிறுவர்கள் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். அந்த நபர் ஏற்கெனவே குற்ற வழக்கில் 8 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தனது தோழியின் கண்ணை தோண்டிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்ற அவர், கடந்த மே மாதம்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வயது விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. எனினும், 6 முதல் 13 வயது வரையிலான சிறுவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன உளைச்சலுக்குள்ளானவர்கள் பள்ளிச் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சீனாவில் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்த ஆண்டில் மட்டும் பள்ளிச் சிறுவர்கள் மீது நடத்தப்படும் 3-ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT