உலகம்

ஆப்கன்: தலிபான்கள் தாக்குதலில் 16 பேர் பலி

4th Sep 2019 01:01 AM

ADVERTISEMENT


ஆப்கன் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்  தொடர்பாளர் நஸரத் ரஹீமி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காபூல் நகரில் அமைந்துள்ள பசுமை சிறப்பு மண்டலத்தில் திங்கள்கிழமை இரவு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்; 119 பேர் காயமடைந்தனர். 
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணிகளும்  இரவு முழுவதும் நடைபெற்றன என்றார் அவர்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தலிபான்கள் நடத்தியுள்ள இத் தாக்குதல் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.



 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT