உலகம்

அமெரிக்காவில் படகு தீப்பிடித்து 34 பேர் பலி

4th Sep 2019 02:32 AM

ADVERTISEMENT


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா குரூஸ் தீவு பகுதியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து மூழ்கியது. இதில், 34 பேர் உயிரிழந்தனர்.
சான்டா குரூஸ் தீவு பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களையும் பவளப் பாறைகளையும் ஸ்கூபா டைவிங் மூலம் கண்டுகளிப்பதற்காக கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று கொண்டிருந்தனர். அதில், 33 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். 
அப்போது, திடீரென தீப்பிடித்து எரிந்த அந்தப் படகு, கடலுக்குள் மூழ்கியது. இந்த விபத்தில், 34 பேர் உயிரிழந்தனர். 
படகின் மேற்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 5 ஊழியர்கள் மட்டும் உயிர் தப்பினர். 
இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
மரபணு பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT