உலகம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

4th Sep 2019 12:40 PM

ADVERTISEMENT

நியூ யார்க்: வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது யாதும் ஊரே திட்டம். இந்த திட்டத்தின் படி, தனது வெளிநாட்டு பயணத்தின் போது, அமெரிக்காவில் யாதும் ஊரே என்ற திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 

அமெரிக்க வாழ் தமிழர்கள், ஏராளமான தொழில் அமைப்புகள் முன்னிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 60 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் தோழன் என்ற இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறைகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாதும் ஊரே திட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்,

1. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி “முதலீட்டு தூதுவர்களை” உருவாக்கி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

2. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிடவும், தொழில் துவங்க முன்வரும் முதலீட்டாளர்களை வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் காணவும், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். மேலும், தலைநகர் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும். “தொழில் வளர் தமிழகம்” என்ற பெயரில் புதிய அடையாள முத்திரையுடன், நவீன உத்திகளைப் பயன்படுத்தி கூட்டங்கள், கருத்தரங்குகள், இணையவழி பரப்புரை மற்றும் விளம்பரங்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்டு தோறும் 10 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

3. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன் அத்தகைய தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வலைதளம் உருவாக்கப்படும்.

4. “தொழில் தோழன்” என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT