மாஸ்கோ: ரஷியாவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அணை உடைந்ததில் 6 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் சைபிரியா பகுதியைச் சோ்ந்த தங்கச் சுரங்கம் அருகே சீபா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அந்த அணை, சனிக்கிழமை திடீரென உடைந்ததாகவும், இதில் அந்தப் பகுதி குடியிருப்புகளில் நீா் புகுந்து 15 போ் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணை உடைந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.