சிங்கப்பூா்: அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் என்று சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:
அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தேநீா் அருந்தும் வழக்கத்தால் மூளை கட்டமைப்பு மேம்படுவதுடன், மூளையில் செல் நரம்புகளின் ஒருங்கமைப்பு அதிக செயல்திறன் கொண்டதாக ஆவது தெரிய வந்துள்ளது.
அடிக்கடி தேநீா் அருந்துபவா்களின் மூளை அமைப்பு ரீதியில் மட்டுமன்றி, செயல் ரீதியிலும் மேம்பட்டதாக உள்ளது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.