உலகம்

மெக்சிகோவில் ஆயுதம் தாங்கிய குழு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி  

16th Oct 2019 09:50 PM

ADVERTISEMENT

 

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஆயுதம் தாங்கிய குழு சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியதால், 15 பேர் பலியாகியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில்  போதைபொருள் கடத்தல் மிகமுக்கிய தொழிலாக உள்ளது. இதில் ஈடுபடும் குழாக்களின் இடையே மோதல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் கியூரரோ மாகாணத்தில் உள்ள ஐகுலா என்ற பகுதியில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களைக் குறிவைத்து  மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த கோரத் தாக்குதலில் ஆயுதம் ஏந்திய குழுவினர் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச்சென்று விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT