உலகம்

பான்சென் லாமா தாங்காகொடுக்கும் விழா

16th Oct 2019 02:23 PM

ADVERTISEMENT

 

11-ஆவது பான்சென் லாமா எர்டேனி நோர்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிக்கு தாங்காகொடுக்கும் விழா அக்டோபர் 15-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ஜின்பிங்கின் சார்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினருமான திங் சுயெ சியாங் இந்நிகழ்ச்சியில் தாங்காவை ஏற்றுக்கொண்டார். 

நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பான்சென் லாமா கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு தாங்காகொடுப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்து வரும் உறுதியான ஆதரவையும், அரசுத் தலைவர் மற்றும் தாய்நாட்டின் மீதான இதயப்பூர்வமான அன்பையும் வெளிப்படுத்துகிறது எனக் கருதப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் பான்சென் லாமா கூறுகையில், தாய்நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய இன ஒற்றுமை மற்றும் திபெத்தின் நிதானம் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் வகையில், இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT