உலகம்

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக அரசுப்படைகள் தொடர் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 89 பேர் பலி 

6th Oct 2019 12:40 PM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக அரசுப்படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலில், கடந்த  24 மணி நேரத்தில் 89 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அரசாங்கத்தை எதிர்த்து தலிபான் இயக்கத்தினர் போராடி வருகின்றனர். தொடர் தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக அரசுப்படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலில், கடந்த  24 மணி நேரத்தில் 89 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹுல்லா அகமத்ஸி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் முழுவதும்  தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தாஹார் மாகாணத்தில் மட்டும் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த மாகாணத்தில் உளள பாஹார்க் மாவட்டம் முழுவதுமாக அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT