உலகம்

இந்திய பயணத்துக்கு முன் இம்ரான் கானை சந்திக்கும் சீன அதிபர்

2nd Oct 2019 02:34 PM

ADVERTISEMENT

 

சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இந்திய வருகைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியா வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி உடன் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். அங்கு இரு நாடுகளின் உறவு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இருநாடுகளுக்கு இடையிலான லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அக்டோபர் 08-ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கான், சீனா செல்வது இது 3-ஆவது முறையாகும். சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் சீனா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT