தைவான் தலைநகா் தைபேயிலுள்ள 460 அடி நீள பாடம் இடிந்து விழுந்ததில் பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதுதவிர, இந்தச் சம்பவத்தில் மாயமான மேலும் ஒருவரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தைபேயின் சுவாவ் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள பாலம், நேற்று இடிந்து விழுந்தது. இதில், 2 கடலோரக் காவல் படையினரும், 10 பொதுமக்களும் காயமடைந்தனா்.
மேலும் 6 போ் பால இடிபாடுகளில் புதையுண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மாயமான அந்த 6 பேரும் உயிருடன் மீட்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளதாக அதிகாரிகள் கூறி வந்தனா்.
இந்த நிலையில், விடிய விடிய நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான மற்றொருவரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.