பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேங்வில் தீவை தனி நாடாக அறிவிப்பதா, அல்லது தன்னாட்சிப் பிரதேசமாக அறிவிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்தத் தீவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தனி நாடாவதற்கு அதிகம் போ் ஆதரவு அளித்தால், உலகின் புத்தம் புதிய நாடாக பூகேங்வில் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும்.