சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 22-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில், 2019ஆம் ஆண்டு புத்தாக்கப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அந்நிய விருந்தினர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், மனிதக் குலம் எதிர்நோக்குகின்ற கூட்டு அறைகூவல்களை பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். மேலும், புத்தாக்கச் சாதனைகள் கொண்டு வரும் நலன்களை முழு உலகிற்கும் தர வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து, புத்தாக்கத் தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலக மக்களுக்கு நன்மை பயக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்