சீனச் சந்தையில் நுழைவது தொடர்பான 2019ஆம் ஆண்டு எதிர்மறைப் பட்டியலை சீன அரசு நவம்பர் 22-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
புதிய எதிர்மறைப் பட்டியலில், 5 வகைப் பொருள்கள் சீனச் சந்தையில் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டன. 126 வகைப் பொருட்கள் சிறப்பு அனுமதி பெற்ற பிறகுதான் சந்தையில் நுழைய முடியும். கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் பதிவு செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கையை விட, புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் எண்ணிக்கை 13 விழுக்காடு குறைந்துள்ளது.
சந்தையில் நுழைவது தொடர்பான எதிர்மறைப் பட்டியல் அமைப்புமுறை இடைவிமாடல் மேம்பாடு அடைவதுடன், அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீனாவில் மேலும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இது, சீனப் பொருளாதாரத்தின் உயர் தரமான வளர்ச்சிக்கு அதிகமான ஆற்றலை ஏற்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்துக்கும் உயிராற்றலைக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
தகவல்: சீன ஊடகக் குழுமம்