உலகம்

ஷிச்சின்பிங்-கிரேக்க தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை

12th Nov 2019 02:42 PM

ADVERTISEMENT

 

கிரேக்கத்தில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 11ஆம் நாள் ஏதென்சில் கிரேக்க அரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சருடன் சந்தித்து உரையாடினார்.

கிரேக்க அரசுத் தலைவர் பாவ்லோபோலஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-கிரேக்க நட்புறவு, இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பில் மட்டுமல்லாமல், இரு நாகரிகங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகள் நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றி, மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கின் உருவாக்கத்தை முன்னெடுத்து, தொன்மையான நாகரிகச் சிறப்பு மிக்கஇரு நாடுகள் புதிய யுகத்தில் புதிய ஒளியை மிளிரச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பாவ்லோபோலஸ் கூறுகையில், உறுதியற்ற காரணிகள் நிறைந்த தற்போதைய உலகில், அமைதி, நல்லிணக்கம், சமநிலை ஆகியவற்றை சீனா ஆதரித்து, உலக அளவிலான பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு தேவையான, மிகவும் பயனுள்ள வழிமுறைகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அண்மையில் நிறைவடைந்த 2-ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், கிரேக்கத்தின் வணிகப் பொருட்களின் பரிவர்த்தனைத்தொகை கடந்த முறை நடைபெற்ற இப்பொருட்காட்சியில் இருந்ததை விட, 2.5 மடங்கு அதிகம். கிரேக்க தலைமையமைச்சர் மிட்சோடாகிஸுடன் சந்தித்த போது, ஷிச்சின்பிங் கூறுகையில், திறப்பை சீனா உறுதியாக விரிவாக்கி, கிரேக்கம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வருவதை இது காட்டுகிறது என்று கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்தில் இரு நாடுகள் பெற்றுள்ள ஒத்துழைப்பு சாதனைகள் பல்வேறு தரப்புகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தொடர்புடைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாட்டுத் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இரு தரப்பு வர்த்தகம், நிதி, எரியாற்றல், கல்வி முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு ஆவணங்களின் பரிமாற்ற நிகழ்ச்சியில்ஷிச்சின்பிங்கும் மிட்சோடாகிஸும் கலந்து கொண்டுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT