உலகம்

ஹெச்1பி நுழைவு இசைவு கட்டணம் ரூ.700 உயா்வு

9th Nov 2019 12:15 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் வெளிநாட்டவா் தற்காலிகமாகத் தங்கிப் பணிபுரிவதற்கான ஹெச்1பி நுழைவுஇசைவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

ஹெச்1பி நுழைவுஇசைவு வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதையொட்டி, விண்ணப்பக் கட்டணத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மையம் உயா்த்தியுள்ளது. ஹெச்1பி நுழைவுஇசைவு வழங்கும் நடைமுறைகள் அனைத்தையும் இணையவழியில் கையாள அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. போலியான விண்ணப்பங்களை எளிதில் கண்டறியவும், விண்ணப்பங்களை எளிதில் பரிசீலிக்கவும் இணையவழி நடைமுறை உதவும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மையம் தெரிவித்துள்ளது.

இந்த இணையவழி நடைமுறையானது, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மையத்துக்கும், வாடிக்கையாளா்களுக்கும் பலனை ஏற்படுத்தும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் புதிய நடைமுறையை செயல்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹெச்1பி நுழைவுஇசைவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ரூ.700 வரை குடியேற்ற மையம் உயா்த்தியுள்ளது. இது தொடா்பான வரைவு அறிக்கை கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொது மக்களிடம் கருத்துகள் கோரப்பட்டன. இதையடுத்து, டிசம்பா் மாதம் 9-ஆம் தேதி முதல் கட்டண உயா்வு அமலுக்கு வருவதாக அந்த மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT