சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச்செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 2, 3 ஆகிய நாட்களில் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்தியக் கமிட்டியின் 4ஆவது முழு அமர்வின் எழுச்சியை ஆழமாகச் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நிதானமாக முன்னேற்றும் பொதுவான நிலையை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதோடு, வளர்ச்சியின் புதிய கண்ணோட்டத்தைப் பன்முகங்களிலும் செயல்படுத்துவதன் மூலம், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை விரைவுப்படுத்தி, யாங்சி ஆற்றுக்கழிமுக ஒருமைப்பாட்டைப் பயனுள்ள முறையில் முன்னேற்ற வேண்டும் என்றும், சோஷலிச நாகரியமயமாக்க சர்வதேச மாநகருக்கான நிர்வாக ஆற்றலையும் நிலையையும் இடைவிடாமல் உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்