உலகம்

அமெரிக்கா, சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தத்துக்காக புதிய இடம் தேர்வு செய்யப்படுகிறது: டொனால்ட் டிரம்ப்

1st Nov 2019 09:57 AM

ADVERTISEMENT

 

சிலி நகரில் நடைபறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதலாம் கட்ட புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான புதிய இடம் தேர்ந்தெடுக்கும் பணியில் அமெரிக்காவும், சீனாவும் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். 

சிலியில் 60 சதவீத வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நடைமுறை சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.  

புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட உடன் அங்கு தானும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கையெழுத்திடவுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT