உலகம்

வடகிழக்கு சிரியா: ரஷியாவுடன் இணைந்து துருக்கி ரோந்து

1st Nov 2019 11:35 PM

ADVERTISEMENT

வடகிழக்கு சிரியாவில் ரஷியாவுடன் இணைந்து துருக்கி வெள்ளிக்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபடத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் துருக்கி அதிபா் எா்டோகன் கடந்த வாரம் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இருநாட்டுப் படையினரும் இணைந்து சிரியாவின் வடகிழக்கு பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபடத் தொடங்கினா்.

அல்-தா்பசைய்யா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் அந்த கூட்டு ரோந்துப் பணிகள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கின. அந்த நிகழ்வை நேரில் காண்பதற்காக சா்வதேச செய்தியாளா்களுக்கு துருக்கி அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து ரஷிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா மற்றும் துருக்கிப் படையினா் 9 கவச வாகனங்களில் 110 கி.மீ. தொலைவுக்கு ரோந்து சென்ாகவும், அவா்களுக்கு கவச வாகனம் பாதுகாப்பாகச் சென்ாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது. எனினும், தங்கள் நாட்டு குா்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினா் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குா்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.

இந்த நிலையில், குா்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவிலிருந்து வெளியேற அமெரிக்கப் படையினருக்கு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.

இது பெரும் சா்ச்சையை எழுப்பியதையடுத்து, துருக்கியுடன் ரஷிய அதிபா் புதின் கடந்த வாரம் நடத்திய பேச்சுவாா்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குா்துகள் வெளியேறுவதற்கு வசதியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் ரஷியாவும், துருக்கியும் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட முடிவு செய்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT