உலகம்

பிரிட்டன்: ஓய்வு பெற்றார் கீழவைத் தலைவர்

1st Nov 2019 02:52 AM

ADVERTISEMENT

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கீழவைத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்த ஜான் பெர்கோ, வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். பிரெக்ஸிட் விவகாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த மிகக் கடுமையான விவாதங்களை எதிர்கொண்டபோது, பிரெக்ஸிட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்களிடையே அவர் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT