உலகம்

சின்ஜியாங் பிரச்சினையில் உறுதியான ஆதரவு பெற்றுள்ள சீனா

1st Nov 2019 02:38 PM

ADVERTISEMENT

 

74-ஆவது ஐ.நா பேரவைவும் ஐ.நாவின் இனவெறி பாகுபாடு ஒழிப்பு ஆணையமும் 29-ஆம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட சில மேலை நாடுகளின் பிரதிநிதிகள் சின்ஜியாங் பிரச்னையைப் பயன்படுத்தி சீனா மீது தீய நோக்கத்துடன் பழி கூறினர்.

இப்பேச்சுவார்த்தையில், இந்த மேலை நாடுகளின் கூற்றை எதிர்க்கும் வகையில், 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சின்ஜியாங் பிரச்னை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.

சின்ஜியாங் பிரச்சினை தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதோடு, இந்த நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்கள் பரவலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவர்களின் இந்த கருத்துக்கள்சீன சின்ஜியாங்கின் வளர்ச்சி உண்மை நிலைமைக்கு மதிப்பு அளிப்பதை இது காட்டுகின்றன.

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT