தெற்கு சூடானுக்கான ஐ.நா. படை தளபதியாக இந்தியர் நியமனம்

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படை தளபதியாக, இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினேகரை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
தெற்கு சூடானுக்கான ஐ.நா. படை தளபதியாக இந்தியர் நியமனம்

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படை தளபதியாக, இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினேகரை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானில், ஐ.நா. அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் படையில் தளபதியாக இருந்து வரும் ருவாண்டா ராணுவ அதிகாரி ஃபிராங்க் கமான்ஸியின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 26) நிறைவடைகிறது.
இதனால் காலியாகும் அந்தப் பதவிக்கு, இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினேகரை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சைலேஷ் தினேகர் இந்திய ராணுவத்தில் 34 ஆண்டுகளாக மிகச் சிறந்த சேவையாற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய ராணுவ அகாதெமியில் 1983-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற சைலேஷ் தினேகர், 1996, 1997-ஆம் ஆண்டுகளில் அங்கோலாவிலும், 2008, 2009-ஆம் ஆண்டுகளில் சூடானிலும் ஐ.நா. அமைதிப் படையில் சேவையாற்றியுள்ளார்.
57 வயதாகும் சைலேஷ் தினேகர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com