அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர ஈரானிடம் ஜெர்மனி வலியுறுத்தல்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்த அம்சங்களைத் தொடர்ந்து நிறைவேற்றுமாறு ஈரானிடம் ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர ஈரானிடம் ஜெர்மனி வலியுறுத்தல்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்த அம்சங்களைத் தொடர்ந்து நிறைவேற்றுமாறு ஈரானிடம் ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக, ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அரசியல் பிரிவு இயக்குநர் ஜென்ஸ் ப்ளோயெட்னர் (படம்)
ஈரான் சென்றுள்ளார்.
அங்கு, அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்ஷியுடன் அவர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி அப்பாஸிடம் அவர் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாடு அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்று ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் விலக்கிக் கொள்ளவும் சம்மதித்து, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார். இதன் காரணமாக, அந்த ஒப்பந்த அம்சங்கள் அமல்படுத்தப்படுவதை நிறுத்திவைப்பதாக ஈரான் கூறியிருந்து. 
இதனால் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலில், ஜெர்மனி வெளியுறவுத் துறை உயரதிகாரி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com