பாரீஸ்: இந்திய விமானப் படை அலுவலகத்தை உடைத்து திருட முயற்சி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ரஃபேல் ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை அலுவலகத்தை உடைத்து, அங்குள்ள முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ரஃபேல் ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை அலுவலகத்தை உடைத்து, அங்குள்ள முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்ததாவது:
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த விமானங்கள் தயாரிப்புப் பணிகள், பாரீஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை, இந்திய விமானப் படையின் உயரதிகாரி தலைமையிலான குழு ஒருங்கிணைத்து வருகிறது. இந்தக் குழுவின்  அலுவலகம், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.
அந்த அலுவலகத்துக்குள் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவரங்கள் அடங்கிய பல முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அலுவலகத்தைத் தகர்த்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் திருட்டு முயற்சி தோல்வியடைந்து விட்டது. அந்த அலுவலகத்தில் இருந்து எந்த ஆவணமும், ஆயுதமும் திருடப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்த சம்பவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமும், பாரீஸில் உள்ள இந்திய தூதரத்திடமும் இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com