தென்னாப்பிரிக்க அதிபராக ராமபோசா மீண்டும் தேர்வு

தென்னாப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோசா (66) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோசா (66) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் உள்ள 400 தொகுதிகளில் 230 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது.
இந்நிலையில், கேப்டவுனில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் ராமபோசாவை மீண்டும் அந்தப் பதவிக்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள் தேர்வு செய்தனர்.
இந்தத் தகவலை தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபராக ராமபோசா வரும் சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார். இதன்பின்னர் துணை அதிபரையும், அமைச்சரவையையும் ராமபோசா அறிவிப்பார்.
1996ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை மக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். பின்னர் தேசிய அவைக்கு செல்லும் உறுப்பினர்களை அக்கட்சி தேர்வு செய்து அறிவிக்கும். இந்த உறுப்பினர்கள், அதிபரை தேர்வு செய்வார்கள்.
தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகினார். இதன்பின்னர் தென்னாப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com