மீண்டும் இந்தோனேஷிய அதிபராகிறார் விடோடோ: தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிபர் ஜோகோ விடோடோ. 
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிபர் ஜோகோ விடோடோ. 


இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தோனேஷிய பொதுத் தேர்தல் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. அந்த நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அதிபர் விடோடோ கூறுகையில், விரைவில் நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் நான் மீண்டும் அதிபராகவும், மாருஃப் அமீன் துணை அதிபராகவும் பொறுப்பேற்போம் என்றார்.
ஏற்கெனவே, ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
சலுகைகள் மூலம் வாக்காளர்களைக் கவர்தல், போலி வாக்குகள் போன்ற முறைகேடுகள் காரணமாக விடோடோ வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ குற்றம் சாட்டி வருகிறார்.
இதன் காரணமாக, விடோடோவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்தோனேஷியாவின் அடுத்த அதிபராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஜோகோ விடோடோவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் பிரபோவோ சுபியான்டோவின் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் விடோடோ வெற்றி பெற்றதை எதிர்த்து அரசியல் சாசன நீதிமன்றத்தில் பிரபோவோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பிரபோவோ சுமத்தும் குற்றச்சாட்டை நடுநிலையாளர்களும், அதிகாரிகளும் மறுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com