திங்கள்கிழமை 20 மே 2019

ரஷிய விமானத்தில் தீ: 13 பேர் பலி

DIN | Published: 06th May 2019 02:27 AM

ரஷிய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பயணிகள் விமானத்தில் நேரிட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகினர்.
 ரஷியத் தயாரிப்பு சூப்பர் ஜெட்-100 ரகத்தை சேர்ந்த அந்த பயணிகள் விமானம், மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அபாய சிக்னலை வெளியிட்டது. பின்னர் அதே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 முதலில் அந்த விமானத்தை தரையிறக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து 2ஆவது முறையாக விமானத்தை மீண்டும் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது முன்பகுதி தரையில் உரசியபடி விமானம் தரையிறங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
 இதனையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவசரபாதை வழியாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 13 பயணிகள் பலியாகினர். அவர்களில் 2 பேர் சிறார்கள் என்று மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இதையெல்லாம் சமைத்து சாப்பிட்டுள்ளார்களாம்!
1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!
தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 32 பேர் பலி 
கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து
போருக்கு தயார் என்றால் அதுவே ஈரானின் முடிவாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை