செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

தாய்லாந்து: 2-ஆவது நாளாக மன்னர் முடிசூட்டு விழா

DIN | Published: 06th May 2019 01:56 AM

தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கரணுக்கு முடிசூட்டும் விழா, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சனிக்கிழமை தொடங்கிய இந்த விழாவில் தாய்லாந்தின் 10-ஆவது மன்னராக முடிசூட்டப்பட்ட வஜ்ராலங்கரண், பாங்காக் வீதிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் சென்றார்.
 கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் மன்னரது ஊர்வலத்தைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் காத்திருந்தனர்.
 சக்ரி வம்சத்தின் 9-ஆவது மன்னராக பூமிபல அதுல்யதேஜ் முடிசூட்டிக்கொண்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் முதல்முறையாக மன்னர் முடிசூட்டு விழா நடைபெறுவதால், அதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் மழை வெள்ளம்: 23 பேர் பலி
பாகிஸ்தான்: ஹபீஸ் சயீதுக்கு  இடைக்கால ஜாமீன்
27 ஆண்டுகள் காணாத பின்னடைவு...சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக சரிவு
வெள்ள பாதிப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகள்: சர்வதேச அமைப்புகளிடம் உதவி கோரியது நேபாளம்