திங்கள்கிழமை 20 மே 2019

அமெரிக்கத் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: வெனிசூலா ராணுவத்துக்கு மடூரோ உத்தரவு

DIN | Published: 06th May 2019 01:59 AM

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகும்படி வெனிசூலா ராணுவத்துக்கு அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, கோஜெடஸ் மாகாணத்திலுள்ள சான் கார்லோஸ் ராணுவ பயிற்சியகத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் விளாதிமீர் பாட்ரினோ, சுமார் 5,000 படை வீரர்களிடையே மடூரோ பேசியதாவது:
 கூடிய விரைவில், இந்த புனிதமான பூமியை அமெரிக்க சாம்ராஜ்யம் தொட்டுப் பார்க்க நினைக்கலாம். அந்த நாள் வரும்போது, உங்கள் கரங்களில் உள்ள ஆயுதங்களால் நம் தாய் மண்ணைக் காக்கப் பாடுபட வேண்டும் என்றார் மடூரோ.
 முன்னதாக, வெனிசூலா பிரச்னைக்கு ராணுவத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பைக் கைவிடுவதற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், ராணுவத்தினரிடம் மடூரோ இவ்வாறு கூறியுள்ளார். இதற்கிடையே, பெரும்பாலான ராணுவத்தினர் அதிபர் மடூரோவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ராணுவ வீரர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய நாடாளுமன்றத் தலைவருமான ஜுவான் குவாய்டோவின் ஆதரவாளர்கள் ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
 வெனிசூலாவின் இடைக்கால அதிபராக ஜுவான் குவாய்டோ கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.
 அவரை அமெரிக்கா உள்ளிட்ட 54 நாடுகள் அங்கீகரித்தன. எனினும், அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
 ஹெலிகாப்டர் விபத்து: 7 ராணுவ அதிகாரிகள் பலி
 வெனிசூலா ராணுவ ஹெலிகாப்டர் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 7 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
 சான் கார்லோஸ் ராணுவப் பயிற்சி மையத்தில் அதிபர் மடூரோ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இதையெல்லாம் சமைத்து சாப்பிட்டுள்ளார்களாம்!
1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!
தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 32 பேர் பலி 
கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து
போருக்கு தயார் என்றால் அதுவே ஈரானின் முடிவாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை