திங்கள்கிழமை 20 மே 2019

அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டமைக்க இந்தியா-பிரிட்டன் பேச்சுவார்த்தை

DIN | Published: 06th May 2019 01:23 AM

அதிநவீன தரத்தில் விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டமைக்க பிரிட்டனும், இந்தியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரிட்டனின் ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் கப்பலைப் போன்று அதிநவீன விமானம் தாங்கி கப்பலை உருவாக்கும் திட்டம் குறித்து பிரிட்டன் மற்றும் இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்த போர்க்கப்பலை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இதற்காக, இந்திய பிரதிநிதிகள் ஸ்காட்லாந்தில் உள்ள ரோஸித் கப்பல்கட்டும் தளத்தை ஏற்கெனவே பார்வையிட்டுள்ளனர். இங்குதான் பிரிட்டனின் ஹெச்எம்எஸ் எலிசபெத் போர்க்கப்பல் கட்டப்பட்டது. இதைத் தவிர, ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலும் இங்குதான் கட்டப்பட்டு வருகிறது.
 பிரிட்டன்-இந்தியா பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், புதிய கப்பல் இந்தியாவில் கட்டப்படும். ஆனால், அதற்கு தேவையான உபகரணங்களை பிரிட்டன் நிறுவனங்கள் வழங்கும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ஏற்கெனவே இந்தியாவிடம் 45,000 டன் எடையுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பல் உள்ளது. இது, கடந்த 2004-ஆம் ஆண்டு ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்டது. மேலும், 40,000 டன் எடைகொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை இந்தியா உள்நாட்டிலேயே கட்டமைத்து வருகிறது. இது, பிரிட்டன் போர் கப்பலை காட்டிலும் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.
 இந்த நிலையில் தற்போது, மூன்றாவது போர் கப்பலை 65,000 டன் எடையில் பிரிட்டன் உதவியுடன் கட்டமைக்க இந்தியா தயாராகி வருகிறது. ஐஎன்எஸ் விஷால் என்று பெயரிடப்படும் இந்த கப்பலை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஸ்டூவர்ட் ஆண்ட்ரூ கூறியதாவது:
 உபகரணங்கள் மற்றும் செயல்திறன் தொடர்பான விவகாரங்களில் வழக்கமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளோம். இதற்கு மேலும் கருத்து தெரிவிக்க இது சரியான தருணமில்லை என்று கூறி தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இதையெல்லாம் சமைத்து சாப்பிட்டுள்ளார்களாம்!
1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!
தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 32 பேர் பலி 
கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து
போருக்கு தயார் என்றால் அதுவே ஈரானின் முடிவாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை