தாய்லாந்தில் தொடங்கியது மன்னரின் முடிசூட்டு விழா

தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கரணுக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டும் விழா, ஹிந்து மற்றும் பெüத்த முறைப்படி சனிக்கிழமை தொடங்கியது.
தாய்லாந்தில் தொடங்கியது மன்னரின் முடிசூட்டு விழா

தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கரணுக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டும் விழா, ஹிந்து மற்றும் பெüத்த முறைப்படி சனிக்கிழமை தொடங்கியது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 தாய்லாந்து மன்னருக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டும் விழா, சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.
 ஹிந்து மற்றும் பௌத்த மதச் சடங்குகளுடன் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
 பாங்காக்கிலுள்ள அரச மாளிகையில் காலை 10.09 மணிக்குத் தொடங்கிய அந்த நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பப்பட்டன.
 பொதுவாக தாய்லாந்து அரண்மனை நிகழ்வுகள் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படுவது மிகவும் அரிதாக உள்ள நிலையில், தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பட்ட மன்னர் வஜ்ராலங்கரணின் முடிசூட்டு விழா நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
 1782-ஆண்டு தொடங்கிய சக்ரி வம்சத்தின் 10-ஆவது மன்னராக வஜ்ராலங்கரண் முடிசூடிக் கொள்கிறார்.
 சக்ரி வம்ச மன்னர்கள் ராமா என்ற பெயரில் அழைக்கப்படுவது வழக்கம் என்பதால், தற்போது முடிசூடிக் கொள்ளும் மன்னர் வஜ்ராலங்கரண், 10-ஆம் ராமா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 முடிசூட்டு விழாவின் முதல் நாளில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்கள் மன்னரின் முகத்தில் தெளிக்கப்பட்டது.
 மேலும், பீரங்கி குண்டுகள் முழங்க, பௌத்த துறவிகள் மந்திரங்கள் ஓத, பல்வேறு சடங்குகள் நடைபெற்றன. அத்துடன், கடவுள் வடிவிலிருந்து மனித வடிவுக்கு மன்னர் மாறியதாகக் கூறப்படுவதைக் குறிக்கும் வகையில், ஹிந்து புரோகிதர்கள் மந்திரங்களை ஓதினர்.
 சக்ரி வம்சத்தின் 9-ஆவது மன்னரான பூமிபல அதுல்யதேஜ் மறைவைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தாய்லாந்து மன்னராக வஜ்ராலங்கரண் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுகிறது.
 இந்த விழாவுக்கு 3 நாள்களுக்கு முன்னதாக, தனது பாதுகாவல் படையின் துணைத் தலைவர் சுதிதாவை மன்னர் வஜ்ராலங்கன் திருமணம் செய்து கொண்டு, நாட்டின் ராணியாக அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com