பாகிஸ்தானில் சீன வெளியுறவு துணை அமைச்சர்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை துணை அமைச்சரை சீனா அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தானில் சீன வெளியுறவு துணை அமைச்சர்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை துணை அமைச்சரை சீனா அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் லூ காங், அந்நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளியுறவு துணை அமைச்சர் காங் ஷூவான்யு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு தொடர வேண்டும் என்பதும், பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்.
கர்தார்பூரில் அமைந்துள்ள குருநானக் வழிபாட்டு தலத்தில் சீக்கியர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் செல்வதற்காக வழித்தடம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதை சீனா வரவேற்கிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது என்றார் அவர்.
சீன வெளியுறவு துணை அமைச்சர் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்வாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இந்தச் சூழ்நிலையில், இருநாடுகளுக்கு இடையேயும் சீனா தொடர்பில் உள்ளது' என்று அவர் பதிலளித்தார் லூ காங்.
ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் வலியுறுத்தியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதுதொடர்பாக சீனா தனது உறுதியான முடிவை அறிவிக்கும்' என்றார்.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பதற்றத்தை தணிப்பதற்காக சீனாவிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சீனா தனது பிரதிநிதியை அனுப்பி வைக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com