குறைந்த அளவில் போதை மருந்து வைத்திருப்பவர்களை குற்றவாளிகளாகக் கருதுவதற்குப் பதில், அவர்களை நோயாளிகளாகக் கருதி மருத்துவம் அளிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த அளவில் போதை மருந்து வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றாலும், போதை மருந்துகள் ஒருபோதும் சட்டப்பூர்வமாக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.