பிரெஞ்ச் பிரைட் என்றொரு உணவுப் பண்டம் இருக்கிறது. இன்று இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்து அன்றே அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு பிரான்ஸை கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதக்கியுள்ளது.
பிரான்ஸில் நேற்று 113 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஏற்கனவே, கடுமையான கோடை வெப்பத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கோடை வெப்பமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மத்திய ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. உடனடியான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவாக பிரான்ஸில் 45.9 டிகிரி செல்சியஸ் (114.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை அதிகபட்ச வெப்பமாக 2003ம் ஆண்டு இதேப் பகுதியில் 44.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
இதுபோன்றதொரு வெப்பத்தை பார்த்ததே இல்லை என்கிறார்கள் பிரான்ஸ் மக்கள்.