உலகம்

சனிக் கிரகத்தின் நிலவில் ஆய்வு: நாசா திட்டம்

29th Jun 2019 12:46 AM

ADVERTISEMENT


சனிக் கிரத்தை சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சனிக் கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
85 கோடி டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ், ராக்கெட் மூலம் டிராகன்ஃப்ளை ஆய்வு விமானம் வரும் 2026-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, 2034-ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT