மீண்டும் டிரம்ப் - கிம் சந்திப்பு: அதிகாரிகள் ஆலோசனை: தென் கொரியா தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே 3-ஆவது சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாட்டு
ஹனோயில் டிரம்ப் - கிம் (கோப்புப் படம்).
ஹனோயில் டிரம்ப் - கிம் (கோப்புப் படம்).


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே 3-ஆவது சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ரகசியமாக ஆலோசித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கூறியதாவது:
பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உள்ள விருப்பம், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்குக்கும் ஒருபோதும் குறையாது.
அவர்களிடையேயான கடிதப் போக்குவரத்து இன்னும் தொடர்ந்து வருவதே அதற்குச் சான்றாகும்.
என்னைப் பொருத்தவரை, இரு தலைவர்களிடையே மியான்மர் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற கடைசி சந்திப்பு தோல்வியடைந்ததாகக் கூற முடியாது.
இரு தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை முன்வைக்கவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும்தான் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
ஹனோ பேச்சுவார்த்தையில் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டது.
கொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் வெற்றி தோல்வியை ஒன்றிரண்டு சந்திப்புகள் முடிவு செய்துவிடாது.
எனவே, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா, வட கொரியா ஆகிய இரு நாடுகளுமே உணர்ந்துள்ளன.
அதன் காரணமாக, டிரம்ப் - கிம் இடையிலான 3-ஆவது சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ரகசியமாக ஆலோசித்து வருகின்றனர் என்றார் அவர்.
ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்த வட கொரியா, தனது அணு ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, டிரம்ப், கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், மியாமன்மர் தலைநகர் ஹனோயிலும் இரு முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த டிரம்ப் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், தென் கொரிய அதிபர்மூன் ஜேன்-இன் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com