பணப் பரிவர்த்தனை வழக்கு: ஜர்தாரியை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியை 11 நாள்
பணப் பரிவர்த்தனை வழக்கு: ஜர்தாரியை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி


சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியை 11 நாள் காவலில்  விசாரிக்க அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
முறைகேடாகப் பெற்ற பணத்தை போலி வங்கிக் கணக்குகள் மூலம் வெளிநாடுகளில் பதுக்கியதாக முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஜர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தால்புர் மீது தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜர்தாரி தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து ஜர்தாரியிடம் விசாரிக்க, அவரை 15 நாள் காவலில் வைத்திருக்க நீதிமன்றத்திடம் அதிகாரிகள் அனுமதி கோரினர்.
எனினும், அவரை 11 நாள் மட்டும் காவலில்  விசாரிக்க நீதிபதி முகமது அர்ஷத் மாலிக் அனுமதி அளித்தார்.
இதுகுறித்து நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜர்தாரி, அரசியல் காரணங்களுக்காக தன்னை கைது செய்யுமாறு உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், ராணுவத்தால் அவர் நியமிக்கப்பட்டதாகவும் ஜர்தாரிகூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com