வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்: இலங்கை நாடாளுமன்றக் குழு விசாரணை தொடக்கம்

DIN | Published: 12th June 2019 12:59 AM


இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? என்பது குறித்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த விசாரணை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஈஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதலுக்கு, அரசின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகள் காரணமா என்பது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு  செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியது.
தொடக்கத்தில், இதுகுறித்து முஸ்லிம் தலைவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்பட்டன. அப்போது, மக்களிடையே மதவெறி தூண்டப்படுவது குறித்து ஏற்கெனவே அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலியை நாடாளுமன்றக் குழு நேரில் அழைத்து அவரிடம் விசாரணை நடத்தியது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவை தலைவரான அதிபர் சிறீசேனா எதிர்ப்பு தெரிவித்தார்.
அந்த விசாரணையை தடுத்து நிறுத்தாவிட்டால், இனி வரும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றக் குழுவின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியா-ஜாம்பியா இடையே : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல் ரஃபேல் விமானம் செப். 20-இல் ஒப்படைப்பு
ஜி-7 மாநாட்டில் மோடியைச் சந்திக்கிறார் டிரம்ப்: காஷ்மீர் குறித்து பேசுகிறார்


காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தானின் இருதரப்பு பிரச்னை: பிரான்ஸ், வங்கதேசம் கருத்து

மோடி நலமா? நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவில் 50,000 பேர் முன்பதிவு