புதன்கிழமை 19 ஜூன் 2019

ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது சவூதி அரேபியா

DIN | Published: 12th June 2019 12:59 AM


யேமன் கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய இரு ஆளில்லா தாக்குதல் விமானங்களை தங்களது வான்பாதுகாப்புப் படைப் பிரிவு சுட்டுவீழ்த்தியதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சவூதி அரேபியாவிலுள்ள காமிஸ் முஷேத் பகுதியைக் குறிவைத்து, யேமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
எனினும், அந்தத் தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய இரு ஆளில்லா விமானங்களை சவூதி வான்பாதுகாப்புப் படைப் பிரிவு சுட்டு வீழ்த்தியது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், காமிஸ் முஷேத் பகுதியிலுள்ள மன்னர் காலித் விமான தளத்தைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஹெச்-4 விசாவை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை உருவாக்கும் பணி நிறைவடையவில்லை : அமெரிக்கா
இந்திய-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 38% அதிகரிப்பு
மேற்கு ஆசியாவில் மேலும் 1,000 படையினர் குவிப்பு:அமெரிக்கா ஒப்புதல்
வங்கதேசம்: அவதூறு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன்
பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: சிரியாவில் 45 பேர் பலி